நோக்கம்.
தமிழ் மரபினையும் கலாச்சாரத்தையும்
பிரதிபலிக்கும் படங்களை இணையத்தில் பகிர்வது இந்த வலைப்பூவின் நோக்கம்.
ஏன்?
இந்த வலைப்பூ பிறப்பின் முன் கூகுல் இமேஜ் தேடு
பொறியில் தமிழ் என தேடினால் வரும் படங்கள் தந்த அதிர்ச்சி மட்டுமே இவ்வலைப்பூவை
துவங்க காரணம்.
எப்படி?
கூகுல் தேடுபொறியின் பக்கங்களை மாற்ற முடியுமா? முடியும். தொடர்ந்த
வலை ஏற்றத்தின் மூலமே இது
சாத்தியம்.
தமிழ் மரபினை சார்ந்த படங்களை தக்க
மாற்றங்களுடன் வலையேற்றம் செய்தால் இது சாத்தியம்.
உ.தா : பாரதியின்(கவிஞர்) ஒரு படத்தை
பெயர்மாற்றம் செய்வது எப்படி?
பொதுவாக படங்கள் dsc09.jpg என்றோ அல்லது dsc99.jpg என்றோ இருக்கும்.
இப்படங்களை அப்படியே வலையேற்றம் செய்தால் பலன் இருக்காது. மாறாக படங்களை மிக நீளமாக பெயரிட்டு வலையேற்றம்
செய்யவேண்டும்.
பாரதியின் படத்தினை பின்வருமாறு பெயரிடலாம்.
பாரதி தமிழ் கவிஞர் கவிராசன்.jpg
bharathi tamil kavingar kaviraasan.jpg
என பெயரிடுவதும் கவனமாக டாக் சேர்ப்பதுவும்
அவசியம். அருள்
கூர்ந்து ஆங்கிலத்தில் பெயரிடவும். உங்கள் வலைப்பூக்களில் இந்த முறையை பின்பற்றி
தமிழ் உணர்வோடு படங்களை பதிவேற்றம் செய்தால் அது தமிழுக்கு செய்யும் ஒரு பெரும்
தொண்டாகும்.
இன்றய கூகுல் இமேஜ் தமிழ் தேடலின் பதில்
இதுதான்.
இது மாற வேண்டும் என நான் நினைக்கிறேன். நானாக இதை செய்ய முடியாது. உங்களின் ஒரு
ஐந்து நிமிடம் நமது முகவரியை மாற்றும். அருள் கூர்ந்து தமிழ் படங்களை
பதிவேற்றுங்கள்.
தனிமரம் தோப்பு ஆகாது. ஊர் கூடி தேர் இழுத்தால்
தான் இது சாத்தியம். எனவே தோழர்களே
தமிழால் இணைவோம்.
நன்றி
கஸ்தூரி ரெங்கன்
www.malartharu.com
tamil.malartharu.com
vathiyar@gmail.com
No comments:
Post a Comment